வீரகவிசிந்து -1 கார்த்திக் ,திருநெல்வேலி

விடியல் விடியாது போகட்டும்-பொல்லா
=====இரவிலும் போராட கற்றுகொள்
சிந்தை சிதறா நெஞ்சினுக்கே
=====வித்தைகள் வசமாகும் ஏற்றுக்கொள்
சக்திகள் எப்போதும் மடியட்டும்
=====புதுசக்தியை ஏற்கும் துணிவுகொள்
மத யானை கூட்டங்கள் மோதட்டுமே
====சாவை மிஞ்சிடும் சதிராட்டம்கொள் !!!

வலிகள் இல்லாமல் வலிமையா
====வலிகளை நீ வழிய ஏற்றுகொள்
சுமைகள் இல்லாத வாழ்க்கையா
====வளைந்து சுமையை தாங்கிகொள்
குலைந்து மட்டும் வாழாதே
====குற்றமற்ற வாழ்கையே உயர்வாகும்
வைக்கும் குறி பெரிதாகட்டும்
====அடையும் வெறி அதிகமாகட்டும் !!!

புதுசிந்தனை பல நீ செய்திடு
=====மண்ணையும் பொன்னாய் மாற்றிடு
உன் காலடி படும் இடமெல்லாம்
=====ஏழ்மையே இல்லாது செய்திடு
உள்ளத்தின் ஒளியை பெருக்கிடு
=====உலகிற்கு அவ்வொளிதனை பகிர்ந்திடு
அட வானமென்னடா வானம்-அந்த
=====வானத்தை தாண்டியும் வளர்ந்திடு !!!

*********************தொடரும்***********************

அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (21-Apr-14, 10:52 pm)
பார்வை : 634

மேலே