ஆணைமுடி

வாரண கூட்டம் நீர் தேடி அசையும் நடையும்
மான்கள் கூட்டம் மிரள காரணம் தேடி திரியும்
குயில்கள் மெட்டு அமைத்து பாடும் இசையும்
வானர கூட்டம் வம்பு தேடி உரசும் கிளையும்
கரடிகள் நிழல் தேடி நிம்மதி வேண்டி அயரும்
வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் உறங்கும்
செடி கொடிகள் சோம்பி வெயிலில் சுணங்கும்
ஆகமொத்தம் அத்தனை உயிர்களுடைய தர்மம்
தன் இறை தேடும் தன் உடல் ஓம்பும் கேவலம்
மானிட மிருகம் மட்டும் அடுத்த உயிரை கெடுக்க
ஆனைமுடி பறிக்க கெட்ட மதியுடன் கார்முகில்
முழுமதியை மறைப்பது போல அலையும் ச்சே ..

எழுதியவர் : கார்முகில் (21-Apr-14, 3:21 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 146

மேலே