மழலையின் கடிதம்
அன்புள்ள அம்மா,அப்பாவுக்கு,
சூப்பர்மார்க்கெட்க்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள்...
வெகு நாட்களுக்கு நீடிக்காது என் சண்டித்தனம்!
எங்கும்,எப்பொழுதும் என்னை சுமைந்து செல்லுங்கள்...
சில வருடங்களுக்கு பிறகு நீங்களே விரும்பினாலும் அது முடியாது!
நான் சாப்பிடுவதைக் கண்டு ரசியுங்கள்...
ஒரு நாள் நீங்கள் துடைக்க சாக்லேட் படிந்த முகம் இருக்காது !
நான் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் கூறுங்கள்...
அறியாமை மறைந்துவிடும் சில நாட்களில்...
உங்கள் தலையிருக்குமிடத்தில் எனது காலிருந்தாலும் அரவணைத்துப் படுங்கள்...
என்றும் சிறேயவனாகவே இருக்கமாட்டேன்!
என் மழலை பேச்சை கேட்டுக்கொண்டே இருங்கள்...
மறந்துவிடுவேன் அம்மொழியை சில நாட்களில்!
இப்படிக்கு,
உங்கள் அம்மு.