பிரதமர் மோடி
![](https://eluthu.com/images/loading.gif)
அலை என்றா வலை விரித்தாய் -உன்னை
அறிந்தோருக்கு தெரியும்
வந்தது சுனாமி அலை அது
சுருட்ட போவது 'சமூக நீதியை'.
-ஊருக்கு ஒரு பேச்சு
இனத்துக்கு ஒரு பூச்சு
எது உன் உண்மை முகம்?
பொய் திரை கிழித்தால் தெரியும்
R.S .S இன் குரூர முகம் .
தேர்தல் அறிக்கையா?
இந்துத்துவா திணிப்பா?
ராமர் கோவிலுக்கும் ,பசுவதை தடுப்பிற்கும்
அவசரம் என்ன?
எங்கே தமிழனுக்கான குரல்?
ஈழ தமிழன் -எவன் அவன்
தமிழக மீனவன்- எனக்கென்ன?
காவிரி பிரச்சனை-கண்டும் காணாமலும்
முல்லை பெரியாறு -தெரியாது
இவை தானே உன் பதில்.
திராவிட கட்சியும் உன்னுடன் கூட்டணியாம்
அரியணை ஏற ஆசை அவனுக்கும்
கொள்கையை அம்மணமாய் விட்டு.
இந்து தேசியவாதி தாம் இனி
நம் இந்திய பிரதமர்
ஓங்கி அடிப்பான்- எதிர்த்தால்
உள்வாங்கி செரிப்பான்.
கார்பரேட்டுகளின் கைக்கூலி
இனி இந்திய மண்
டாட்டா வுக்கும் ,அதானிக்கும்
விலை போகும் .
வருணாசிரமம் மீண்டு வரும்
இட ஒதுக்கிடு இல்லாமல் போகும்.
போனவன் வந்தானடி
ஆண்டி யாக்கி சென்றானடி-என
தலை மீது கை வைத்து அழும்
நிலை வரும்.
வாழ்க பாரதம்