கைக்கூலி
"என்ன கொடுப்பீர்கள்"
ஒரே கேள்வியில் ........
பெண்மையின் ஆசைகள்
ஹைக்கூ
வரிகளுக்குள் சுருக்கப்படும்
ஒரு பெண்மை
இன்னொரு பெண்ணால்
பூச்சியமாக்கப்படும்
போதிமரம்
புற்களின் நிழலில்
ஞானம் பெறும்
விருட்சமாய் இருந்தவை - மீண்டும்
விதைகளுக்குள் முடங்கிப்போக
சாபம் பெறும்.
வாழ்க்கையை அனுபவிக்க
முதல் எழுத்தாய்
வலது கால்,
முற்றுப்புள்ளியாய் இன்னொரு கால்
நடக்க முடியாமல்
பெண்மை,
பெருமூச்சு விடும்
கலாச்சாரத்தின்
தமிழ் அகராதியில் மட்டும் - இந்த
எழுத்தை அழிக்க முடியாதுதான்
ஆனால்
இன்னுமொரு எழுத்தை
சேர்த்தால் என்னவாம்.
"சீதன எதிர்ப்பு எழுச்சி 2011"
எகிப்திய , தூனிசிய எழுச்சி
மாற்றத்தைத் தந்தது போல்
எமது எழுத்துக்களும்
மாற்றம் தராதா ?
எழுதிப்பார்க்க யாரும் தயாரா ?