சட்டை
நீ என்னை காதலிக்கிறாயா என்பது புரியாத
அந்த ஆரம்ப நாட்களில் .தெரியாத்தனமாக
நீ அணிந்திருந்த உடையின் வர்ணத்தில் என்
சட்டையின் வண்ணம் இருந்ததை கவனித்த
என் அயோக்கிய நண்பன் ஒருவன்
“டேய் என்ன ரெண்டு பேரும் ஒரே கலரில்”
கிண்டல் செய்து விட அவனை அன்றே திட்டினேன்..
அவ்வளவு மகிழ்ச்சியாக திட்ட முடயுமா என்ற
ஆச்சர்யத்துடன்
அதன் பிறகு அந்த சட்டையை போடவே கூட்சமாய்
போய் பெட்டியில் ஒளித்து வைத்து விட்டேன்..என்று
நான் இப்போது சொல்லிக்கொண்டிருக்கையில் நீ
முகத்தை மூடிக்கொண்டாய் ஏன் என்று கேட்டதற்கு
“நானும் அப்படிதான் ஒளித்து வைத்துக்கொண்டேன்” என்கிறாய்