இதயக்கன்னம்
மருத்துவம் அறிந்து வைத்துள்ளதோ
என்னவோ
உறுப்புக்களின் பெறுமதியை
காதல் நன்கு அறிந்து
வைத்துள்ளது.
உள்ளுறுப்பை மருத்துவமும்
வெளியுறுப்பைக் காதலும்
கவனமாகக் கண்காணிக்கிறது.
கண்ணுக்குத் தெரிவதால்
மயிரிலும் காதல் உயிர்
வாழும்.
அடிமுதல் முடிவரை
வெளியில் தெரியும் எல்லா
உறுப்பும்
காதல் சின்னங்களே!
அதனால்தான்,
உள்ளே இருக்கும் இதயத்தைக்
காதல்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
எண்ணம் தாக்கும் காதல்
சின்னம் இதயம் எல்லாம்
என்னத்துக்கு?
முத்தம் கேக்கும் கன்னம்
மட்டும் போதும் காதல்
சின்னத்துக்கு