சிறப்புக் கவிதை 27 கொங்கு தும்பி புத்தகம்
புத்தகம்
வெள்ளைத்தாளின் வீணை
விபரம்நிறைந்த பானை
அறிவு நிறைந்த புதையல்
அனைவரும் விரும்பும் படையல்
தேடி அருந்தும் பானம்
தெரிந்து கொண்டால் கானம்
இது எல்லை இல்லாவானம்
கருத்துக்கள் ஊரும் சோலை
கடக்க முடியாத சாலை
விஞ்ஞா னத்தில் புதுமை
விண்ணைத்தொடும் பதுமை
விடை சொல்லும் புதிர்
விடியல் காட்டும் வெளிச்சம்
பழமை காக்கும் பத்திரம்
பண்பு சொல்லும் நண்பன்
புதுமை எழுதும் சித்திரம்
ஞானம் தரும் போதி
நாளும் தரும் ஜோதி
உலகே இதனுள் அடங்கும்
உலகை இதனுள் அடக்கும் .