நீ என் மரபுக் கவிதை

நெய்யப் படுபவை அல்ல
நீ என்னை வாசிக்கும் பொழுது
சுகந்தமாய் வீசும் கரங்கள் நோவாமல்
நெய்யும் சேலைபோல ....!

நீ தொடுபவை எல்லாம்
வெறும் புத்தகம் அல்ல
பெட்டகத்தில் வைத்துப்
பாதுகாக்கும் தலைமுறை சொத்து ...!

கண் மலர்கள் அயர்வதில்லை எப்போதும்
உன்னைத் தொட்டு உணர்ந்து மகிழ்ந்து
வாசிப்பவன் காதல் செய்கிறான் உன்னிடம்
வாசிப்பவள் காதல் கொள்கின்றாள் உன்னோடு ....!

உன்னையே கவிஞனாக்கி தலையணையின்றி
உன்னையே தொட்டு அணைத்திட்டே
உறங்கிப் போகிறேன் இரவை விழுங்கி
வெளிச்சப் போர்வை போர்த்தியே...!

கரைந்தே போகின்றது விடியும் வரை
இரவை விழுங்கிய மெழுகு வர்த்திகள்
உன் பொன்முகம் காணவேண்டி தோல்வியடைகிறது பந்தயமிட்டு ....!

உன்னைத் தொடும் போதெல்லாம்
புதுக் கவிதை எழுதத் தோன்றுகிறது
தமிழ் மணம் கமழ முத்தமிழால்
தொட்ட பின் தான் தெரிகிறது
மரபுக் கவியும் என்னுடன் .....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Apr-14, 4:52 am)
பார்வை : 226

சிறந்த கவிதைகள்

மேலே