மாமனே நம் காதல் நினைவாய் உன்னவள்

என்னவனே...
பொய்யாய் என்னை
கோபப்படுத்தும் உன் அன்பு...
நான் கோபம் கொண்ட
நிமிடம் கொஞ்சலாய்
உன் கெஞ்சல்கள் வார்த்தைகளின் அன்பு..
உன் தோள் மீது
நான் உறங்கிய நிமிடங்கள்
ஒவ்வொன்றும் பொக்கிஷமான
நிமிடங்கள் என் வாழ்வில்...
நம் சந்திந்த முதல்நாள்
இருவரின் விழிகளில் அன்பும் காதலும்
கலந்த காதல் பார்வை...
உன் கரம் கோர்த்து நடந்த
பாதையில் மலர்களும்
மரங்களின் வரவேற்பு ...
உன் மடியில்
துயில் கொண்ட நிமிடங்களில்
என்னையே மறந்தேன்...
காதல் பரிசாக என்னவன்
அணித்து விட்ட கொலுசின்
மணியோசைகள் சொல்லும்
மாமனே உன் காதலை...
என்னவன் சூடிவிட்ட
மலர்களின் மணம்
இன்றும் என் கூந்தலில்...
தொலைவில் நாம் இருந்தாலும்
உன்னவளின் நிமிடங்கள்
ஒவ்வொன்றும் உனக்கே சொந்தமடா...
என் வாழ்நாள் முழுவதும்
வேண்டுமடா உன் அன்பும் காதலும்...
உன் அன்புக்காக என்றுமே
காத்துக்கொண்டிருப்பேன்
உன் கருவாச்சியாக...