பிரியாவிடை

ஒரு பூவின் இதழ்களான நாம்,
இப்பொழுது! பிரியவேண்டிய நேரமாதலால் வாடினோம்!

வானிலிருந்து விழும் மழைத்துளிகள் வெவ்வேறு இடத்தில் பிரிந்தாலும், ஒன்று சேருவது கடலில் தான்!!

அது போல, இப்பொழுது மழைத் துளிகளைப் போல் பிரிகிறோம்!!!

என்றாவது நாம் கடல் என்னும் வாழ்கையில் மீண்டும் ஒன்று சேருவோம்.

இடங்கள் மாறினாலும், நாம் இடம் மாற்றி கொண்ட மனங்கள் மாறவில்லை.

அது போதும்,

நிலவு, ஏதோ ஒரு இடத்தில் இருந்து அதன் குளுமையை உணர்த்துவது போல,

எங்கிருந்தாலும் நமது அன்பின் இனிமையை அனுபவித்து கொண்டேதான் இருப்போம்!!

இது கதையும் இல்லை, கற்பனையும் இல்லை!!!
உள்ளத்தின் உணர்வுகள், ஆத்மார்த்தமான நினைவுகள்!!!!

விடை பெற்றுச் சென்றாலும் நம் உள்ளங்களில் அன்பெனும் விதைகளை விதைத்துதான் செல்கிறோம்.

என்றாவது,

விதைத்த விதையின் பூவின் மணத்தால் நம்மை உணர்வோம் என்று எண்ணி பிரியாவிடை கொடுக்கிறோம்!!!

பிரியாத வரமும் வேண்டுகிறோம்!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (25-Apr-14, 4:23 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
பார்வை : 121

மேலே