+சபிக்கப்பட்டோரோ+

குடிசையில் வாழ்வோரென்ன சபிக்கப்பட்டோரோ
தப்புகள் செய்ததென்ன இவரைப்பெற்றோரோ
குப்பைகள் அள்ளுவோர் குத்தகைக்கெடுத்தோரோ
கோட்டையை ஆளுவோர் கடவுளுக்குபிடித்தோரோ
செருப்புகள் தைப்போரென்ன தாழ்த்தப்பட்டோரோ
பொறுப்புகள் வகிப்போரென்ன தவமிருந்துபெற்றோரோ
உணவின்றி வீழுவோர் பாவப்பட்டோரோ
உல்லாசமாய் வாழுவோர் பரிசுபெற்றோரோ
உலகத்தில் ஜனித்ததிவர்கள் கஷ்டப்படத்தானோ
உணர்வுள்ள மனிதன்நினைத்தால் மாற்றமுடியாதோ