நட்பின் நினைவுகள் என்றுமே திகட்டாதவை

நட்பே...

காலங்கள் சர்க்கரையாக
கரைய ...

நட்பின் நினைவுகள் மட்டும்
என்றும் திகட்டாமல்
இதயத்தில் பொக்கிஷமான
புதையலாக புதைக்கப்பட்டுள்ளது...

குழந்தைப்பருவ நட்பு...
பள்ளிப்பருவ நட்பு...
கல்லூரிகால நட்பு..

ஒவ்வோர் நட்பின் நினைவுகள்
மட்டும் திகட்டாமல்
இனிக்கிறது மரணம் வரை...

நட்பின் நினைவுகளை
நினைக்கும் நிமிடம்
ஒவ்வொன்றும் உன்னதமான
தருணங்கள் நம் வாழ்வில்...

எழுதியவர் : sagi (24-Apr-14, 5:09 pm)
பார்வை : 1433

மேலே