+அமைதியாகப் போகுது வாழ்க்கை+

பரபரப்பெல்லாம் அடங்கிப்போனது
பட்டிதொட்டியெல்லாம் வெறுச்சோடிப்போனது
பத்திரிக்கைசெய்திகள் பதத்துப்போனது
பக்கத்துவீட்டுவிஷயமும் காதில்விழுந்தது

பேரணிகூட்டங்கள் ஓய்ந்துபோனது
பெரியபெரியபேச்சுக்கள் நின்றுபோனது
தொலைக்காட்சிதொடர்மீண்டும் பிடித்துப்போனது
தொலைதூரநண்பன்பார்க்க நேரம்கிடைத்தது

பலவண்ணகொடிமறைந்து மேகம்தெரிந்தது
பலகுரலின்பாடல்நின்று இசையும்கேட்டது
பலவாதவிவாதம்போயி சமாதானமானது
பளபளப்பானதிரைசுவரொட்டி சுவற்றில்வந்தது

ஏனிப்படிஏனிப்படி இப்படியானது
ஏணிப்படிஏறவந்தவர் ஏக்கம்தீர்ந்தது
நானிப்படிசொல்லவந்த காரணமானது
இன்றோடுதேர்தலும்தான் முடிந்துபோனது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-14, 1:25 pm)
பார்வை : 105

மேலே