தவறும் கோட்பாடு
கடந்து செல்லும் பார்வைகள்...
உடைந்த மௌனம்...
நினைவின் துரு...
உறைந்த அணிலெனத் திரியும் பயம்...
மழை கசக்கிய கனவு மொட்டுக்கள்...
இரவின் ஏளன இரக்கம்..
கூடு தவறிய பறவை சுமக்கும் அச்சம்...
பல்லிகள்தனிமையில் ஊரும் சுவர்...
ஒட்டடைகளாய் சுருங்கும் நம்பிக்கை...
வறண்ட கண்ணீர்ப் பைகள்...
இன்னமும் முளைக்காத விதையாய் வாழ்க்கை...
பறத்தலின் முயற்சி நழுவ....
குலையக்கூடும்...
தவறி விழுந்த என் வாழ்வின் கோட்பாடு..