நான் வசதியானவன்

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.
இது திருக்குறள் !

ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகன் onsite சென்றான் எனக் கேட்ட தாய்
இது புதுக்குரல் !

ஆம்
டாலருக்கு ஆசைப்பட்டு
தாய் நாட்டை மறந்தவன்
வசதியான வாழ்க்கை தேடி
வானேறிப் பறந்தவன் !

பொல்லாத காசுக்காக
பொய் வாழ்க்கை வாழுகிறேன் !

சொல்லாத சோகத்தை இங்கு
தமிழ் கொண்டு அழுகிறேன் !

குழு குழு ஆரையிலமர்ந்து
சுவையாகப் பருகினாலும்
மனசுக்கு
நிறைவாக இல்லையடா
உயர் தர இலையில் போட்ட
வெளி நாட்டுத் தேனீர் !

கழனித்தண்ணி என்று
திட்டிகிட்டே குடிச்சாலும்
தித்திப்பா இருந்துச்சடா
நாயர் கடை வெந்நீர் !

பலவகை கூட்டோட
சாம்பார் ரசம் சேத்து
நம்மூர் சாப்பாடும்
நயமாய் கிடைச்சாலும் !
எதையோ எதிர்பாத்து
என் மனசு தவிக்குதிங்கு !

பழைய சோறு என்றாலும்
அமிர்தமா இருந்துச்சு
பக்கத்தில் தாய் இருந்து
பாசத்தோட பரிமாற !

காசு பணம் சேந்தாச்சு
கண்ட கனா பளிச்சிடுச்சு !

நெசமாத்தான் சொல்லுற
நான் !
இங்கு வசதியாத்தான்
வாழுது !!!!

எழுதியவர் : நந்தா (25-Apr-14, 10:22 pm)
பார்வை : 115

மேலே