இதயம் சேர்க்க வருவாயா

அப்பா சொன்னார் தைரியமாக பேசு என்று ...
அம்மா சொன்னார் உன் தைரியம் யாருக்கு வரும் என்று..
நண்பன் சொன்னான் மிகவும் தைரியசாலி என்று..
உறவினர் சொன்னார் உனக்கு மிக தைரியம் என்று..
உள்ளம் மட்டும் இதை எதையும் நம்பவில்லை...
உண்மையில் நான் தைரியசாலி இல்லை..
என் காதலை உன்னிடம் சொல்ல...
நான் படும் பயத்தை நினைத்து...
உதடு சொல்லப்போகும் வார்த்தைக்கு ..
உடம்பெல்லாம் நடுங்கதடி....
ஊசியும் போட்டுவிட்டேன் ...
தைரியம் வரவில்லையடி...
உன்னிடம் ஒரு வார்த்தை பேச...
என் இதயத்திற்கு தைரியம் இல்லையடி....
ரத்தமெல்லாம் பனிக்கட்டியாய் மாறுதடி...
நீ அருகில் நின்றால் ..
கத்திரி வெயிலில் கூட ...
உடம்பு குளிருதடி உன்னிடம் பேச நினைத்தால்...
இதயம் சொல்லும் வார்த்தை புரிந்து கொண்டு இதயம் சேர்க்க வருவாயா....
இதயம் சொல்லும் வார்த்தை சொல்ல முடியாமல் தவிக்கும் என்னை கோழையாக மாற்றிடுவாயோ ..