காதலின் பிறப்பிடமே

தங்கத்தின் மேல்....
தாவணி ....

வைரத்தின் மேல் ....
முத்து மாலை.....

அழகு மயில் மேல்....
அடக்க குணம்....

அன்னமே உன்னிடம்...
அரவணைக்கும் மனம்...

அனைத்தையும் புரிந்து கொண்டேனடி...
உன்னை கண்டதும் தெரிந்து கொண்டேனடி...

உலகம் இதை நம்பவில்லையடி....
உன்னை என் மனைவியாக ஏற்று கொள்ள ..
விருப்பம் தரவில்லை....

தங்கத்தின் மேல் தங்கம் கேட்க்கிறது ஒரு கூட்டம்.
தரணி மேல் வாழ தகுதி கேட்க்கிறது ஒரு கூட்டம்..

தாழம் பூவும் தாழம் பூவும் மட்டுமே சேர முடியும் என்னும் ஒரு கூட்டம்...

தாழம் பூவிற்கும் தாழம் பூவிற்கும் தகுதி வேற்றுமை பார்க்கிறது ஒரு கூட்டம்..

தங்கத்தின் தங்க ரதமே...
நீ சுதந்திரமாய் உலா வருவது நடக்க வேண்டும்

அன்று தான் எல்லோரும் கொண்டாட வேண்டும் காதலர் தினமே....

காதலின் பிறப்பிடமே ....

எழுதியவர் : சாமுவேல் (26-Apr-14, 9:20 am)
பார்வை : 136

மேலே