வினை விதைத்தவன்
வினை விதைத்தவன்.....
=========================
விடலைப் பருவம்
விளையாட்டாய் விளையாட்டு
வந்து விழுந்தது போதாதென்று
வலைவீசி சிக்க வைத்து
கூத்தடித்து இரையாக்கி
பெண் இறைச்சி துப்பி... துப்பி...
தூர எறிந்தவாறே
ஒரு மனித மிருகம்....
வேட்டையாடி பெண்கள் தின்று
ஏப்பம் விட்டு ஏப்பம் மறைத்து
மனைவி என்று ஒரு தீனி
சீதனத்தோடு சேர்த்து தின்றான்
அடங்கவில்லை அவன் பசியும்
நாளும் ஒரு தேடலிலே!!!
நாளுக்கு மூன்று வேளை
தேகப் பயணத்தில் அவன்
சொர்க்கம் நோக்கி
வேகக் கட்டுப் பாடின்றி!!!
மல்லிகை அல்வா செலவழிப்பில்
அடிக்கடி பயணம்
அங்கீகாரம் பெற்ற வாகனத்தில்
பயணத்தின் வாகனமோ
பராமரிப்பின்றி!!!
அவளின் வாந்தியும் மயக்கமும்
அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தி
ஆண்மை சான்றிதழ்
அவள் அளித்ததை மறந்து!!!
கொண்டாட்டங்கள்
அவளை விடுத்து...
நட்பு வட்டங்கள் கூட்டி
"காக் டெயில் பார்ட்டியுடன்"!!!!
இரு ஜீவன் உடலுக்கு
ஒரு ஜீவன் வாழவே
உணவு பற்றாக் குறை...
மெலியும் தேகத்துடன் அவள்!!!
அண்டை வீட்டுக்காரர்களின்
கருணைப் பார்வையில்
அவள் மறுத்தும் அளிக்கப் படுகிறது
கருக் குழந்தைக்கும் உணவு!!!
அல்வா கொடுக்கப்பட்ட வாழ்வில்
அவதியுடன் நாளும் அவள்
மாற்றங்கள் கிடைக்குமென
மாறாத நிலையுடன்!!!
குழந்தை பிறப்பினில்
மெருகு குறைந்ததாய்
கூடிக் களிக்க வேறிடம் தேடி
அவன் நாளொரு பயணத்தில்
முடிவறியாதவன்
முடிவினை நோக்கி!!!
செய்கின்ற பாவம்
தீர்க்கின்ற நேரம்
அவன் விழுந்து கிடந்தது
பால்வினை நோயில்!!!