இந்த பாலாய் போன காதலால் ....

அவனை முதல் முதல் சந்தித்த போது அவனின் அமைதியான முகமும் எழிமையான தோற்றமும் என்னை கவர்ந்தது அவனில் நான் காதல் வயப்பட்டேன் ....
என் அப்பா அம்மா விடமும் அறிமுகமானான் அவனை கண்டதும் அவனது நடவடிக்கைகள் அவர்களையும் கவர்ந்தது அவனின் நன்னடக்கத்தால் அவர்களின் மனதிலும் இடம் பிடித்தான் ....
என் அக்காவின் குழந்தைக்கு பிறந்த நாளில் தங்க கைசெய்யினும் வாங்கி பரிசளித்து அவர்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானான் ....
என் கல்லூரி நண்பர்களிடமும் தோழிகளிடமும் அறிமுகம் செய்து அவர்களிடமும் பேசவைத்தேன்
அவர்கள் மனதையும் தன் பேச்சால் திருடிவிட்டான் ....
அவனது அன்பால் அவன்தான் எனது கணவன் என என்னை அவனிடம் கொடுத்தேன் பலமுறை என்னை இழந்தேன் ....
ஒருநாள் எங்கள் காதல் பயணத்தின் போது அவனை காணவில்லை எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை நான் காதலில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்டேன் ....
நடந்ததை யூகித்து கொள்ள முடியாமல் என் பிறந்த வீட்டுக்கு வந்தேன் என் அம்மா அப்பாவின் கண்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் இன்றும் வெட்க்கி தலைகுனிந்து வாழ்கிறேன்....
இந்த பாலாய் போன காதலால்
காதலில் நல்லவர்கள் யார் ....?
ஏமாற்றுக்காரர்கள் யார் ....? என் பதை கண்டு பிடிக்க முடியாமல் தலை குனிந்தே வாழ்கிறேன் ....
நந்தி ....