காதல் நாடகம் = நடித்த காதலி + துடித்த காதலன் ...

காதலெனும் நாடகத்தில் கனவுகளை தொலைத்து ,
இதயத்தில் காயப்பட்ட தழும்புகளை கொண்டு வாழும்
காதலனின் கதை இங்கே கவிதையாக......
என் எதிர்வீட்டில் நீ குடி புகுந்தாய் ,
எனை பார்த்து சிரித்தாய் ,
நானும் சிறு புன்னகை உதிர்த்தேன்...
சில நாட்கள் கழிந்தன......
நீ என்னிடம் வந்து என்னை விரும்புவதாய் உரைத்தாய் ,
காதலில் நம்பிக்கை இல்லை என பதிலுரைத்தேன்.
ஆனால் உன் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது
என் நீ கூறி ,
என் இரும்பு இதயத்தில் முதன் முதலாக காதல் ஈட்டியை எறிந்தாய் .....
நீ இல்லா வாழ்வு எனக்கு
காற்று இல்லா கானகம் என்றாய் .
கரும்பாகி போனதடி இரும்பாக இருந்த எனது
இதயம்......
உன் அன்பிலும் , என் மேல் உனக்கிருந்த காதலிலும் ,
என்னையே மறந்தேன் ,
காதல் கொண்டேன் உன் மேல் ........
என் உயிர்வெளியை விடவும்
உன்னையே அதிகம் சுவாசித்தேன்....
காதலித்தபின் கனவில் கவிதைகள் வரையும்
கவிஞன் ஆனேன்....
என் நாட்கள் உன்னோடு இருப்பதயே அதிகம் விரும்பின ....
ஒருவருடம் ஓடியது அந்த ஒருவருடமும்
பல வருடம் வாழ்ந்த இன்பம்...
சிலநாட்கள் உன்னை காணவில்லை
அங்கும் இங்கும் உன்னை தேடி ஓடினேன்
நீ எங்கு சென்றாய் என.....
உயிர் வந்தது
என் முன்னால் நின்ற உன்னை கண்டபோது ....
சிலநிமிடத்தில் வந்த உயிர் நின்றது
நீ என்னிடம் கூறிய வார்த்தைகளை கேட்டதும்...
நான் உன்னை மறந்து விட்டேன்
நீயும் என்னை மறந்திடு என்றாய்.....
எந்த துக்கத்திலும் கலங்கா என் கண்கள்
கலங்கியது உன் வார்த்தையில் , உன் வார்த்தையில் உண்டான வலியில்...
இறுதியாக காதலின் பிரிவுக்கு நீ கொடுத்த விளக்கம் ...
தமிழில் ஆங்கிலம் கலப்பதை விரும்பா சராசரி தமிழ் இளைங்கர்களில் நானும் ஒருவன்
ஆயினும் இந்த கவிதையில் அதை தவிக்க இயலவில்லை .....
நீ கூறிய அந்த கேவலமான வார்த்தைகள்.....
திஸ் இஸ் ஜஸ்ட் டைம் பாஸ் யா ,
என்னோட பிரண்ட்ஸ் எத்தன பேருக்கு எவ்ளோ காதலன்கள் இருகாங்க தெரியுமா ...
இந்த வயசுல இது ஒரு என்ஜாய்மென்ட் அவ்ளோதான், என் பிரண்ட்ஸ் முன்னால எனக்கும்
ஒருத்தன் இருக்கான்னு சீன் போடத்தான்
இந்த லவ் ... சோ ஜஸ்ட் டேக் இட் ஈஸி பா ஓகே .
நாங்க வீடு கலி பண்ணிட்டு வேற ஊரு போறோம் ..
கரும்பாய் மாறி இருந்த என் இதயம்
துரும்பாய் போனதடி இந்தவர்தைகளில்...
இதற்கு மேலும் நான் இறந்துபோக கொடியவிஷம்
தேவை இல்லை ...
இந்த வார்த்தைகளில் நான் பலமுறை
மரணித்துவிட்டேன் .......
உன்னை போல காதலை விளயாட்டுபொருளாய்
நினைத்து நாடும் கயவர்களால் தான்
நல்ல காதலும் நாதி இழந்து நிற்கிறது.......
பின்புதான் புரிந்தது
நீ வீடு குடியேறும் இடங்களில் எல்லாம்
என்னைபோல பல முட்டாள்கள் காதலனாய் கனவிழந்து நின்றிருக்கின்றனர் என்று....
காதல் காதல் உயிரை விட மேலானது , உண்மையானது, பொய் அறியாது.
எவனடா கூறினான் இதனை ..
நானும் கூறினேனே ஒரு சமயம் என நினைக்கும்போது
எனக்கே என் மேல் ஏளனம் வருகிறது.....
நண்பர்கள் தேற்றினார்கள்
நம்பிக்கையுடன் நடக்கிறேன்
காதலின் மேல் அல்ல
நட்பின் மேல்.......
இப்படிக்கு ,
காதல் நாடகத்தில் கனவை
தொலைத்தவன்.....