சிறப்புக் கவிதை 45 சொ சாந்தி எழுத்து தளம்

..
வசந்தம் தேடிவரும்
கவிக் கூட்டத்திற்கு
கூடிக் களிக்க
ஒரு வேடந்தாங்கல்....

ஆயிரமாயிரம்
கவலைச் சுமையினை
இறக்கி வைக்க
ஒரு சுமைதாங்கி...

ஏழையும் இலவசமாய்
வந்திருந்து
இன்பமுடன் தமிழ் நுகரும்
கவிதைப் பூங்கா...

எண்ணற்ற கவிஞர்கள்
இலக்கிய சத்திரத்தில்
தமிழமுது படைக்க
இலவச விருந்து மண்டபம்..

இருந்த இடத்தில்
எந்நேரமும் அமர்ந்து
சலிக்காது வாசித்து மகிழ
24 மணி நேர நூலகம்...

எண்ணிலடங்கா வாசகர்கள்
கவிதையும் கட்டுரையும்
நிதம் அள்ளி மகிழும்
தமிழ்ச் சுரங்கம்....

காதலொடு அன்பைக் கூட்டி
எண்ணங்களில்
வண்ணம் குழைத்து
கவி தீட்ட ஒரு நவீன சுவர்

முத்திரை ஒட்டா அஞ்சலை
கட்டணம் இல்லாமல்
பட்டுவாடா செய்யும்
முழு நேர துரித அஞ்சலகம்

காதலனை காதலியோடு
சேர்த்து வைக்கும்
இனியதொரு - இலவச
திருமண சேவை மையம்

உலக கவிஞர்களை
ஒட்டு மொத்தமாக
கவர்ந்து வந்து
உள்ளடக்கம் செய்யும்
உன்னத பெட்டகம்

எழுத்து ஆயுதம் வீசி
பங்காளிச் சண்டைகளை
சத்தமின்றி நடத்தும்
யுத்தக் களம்...

நேசிக்கும் ஜோடியை
நாசுக்காய் பிரிக்கும்
நரிகள் நடமாடும்
நயவஞ்சகக் கூடம்..

ஆணிங்கு பெண்ணாகி
பெண்ணிங்கு ஆணாகி
இனம் மாறி நாளுமே
வேடமிடும் நாடக மேடை

பொருளேதும் விளங்காவிடில்
கேள்வி கேட்பவர்க்கு
பல்வேறு விளக்கம் தரும்
குட்டி விக்கி பீடியா

எழுதியவர் : சொ..சாந்தி (26-Apr-14, 3:30 pm)
பார்வை : 157

மேலே