சற்றும் வாராயோ என் கண்ணெதிரே

ஸ்பரிசத்தை சுவாசிக்க செய்து
மூளையை முடக்க செய்து
சதா நீ என்றாக்கிய மடையனே !
சற்றும் வாராயோ என் கண்ணெதிரே !!!
தனிமையை இனிமையாக்கி
சிங்காரமும் என் கைவண்ணமாக்கி
என் நளினத்தில் தனை இழந்த நஷ்டனே!
சற்றும் வாராயோ என் கண்ணெதிரே !!
நிஷ்டையிலும் நீ என்றாகி ,
நிகழ்வுகளை நிழல்களாய் மயங்க செய்து ,
நிச்சயம் உனக்காய் ஏங்க செய்த மாயனே!
சற்றும் வாராயோ என் கண்ணெதிரே !!
என் வழக்கத்தில் மாற்றங்களை நுழைத்து
என் மனதினில் மகிழ்வினை நங்கூரமிட்டு ,
என்னை நானே நேசிக்க வைத்த தேவனே!
சற்றும் வாராயோ என் கண்ணெதிரே !!
வந்தால் நீயும்..
வந்தனம் உரைப்பேன் கண்களால் ,
நன்றிகள் உரைப்பேன் நெஞ்சத்தால் ,
தட்சணையாய் கொடுப்பேன் என்னையும் ,
தலைவனே !!
சற்றும் வாராயோ என் கண்ணெதிரே !!