காதல் என்னை காதலிக்கின்றது

இந்த காதல்
என்னை
காதலிக்கின்றது..!!

நான் செல்லும்
இடம் எல்லாம்
வெட்கமே இல்லாமல்
பின்தொடர்ந்து வருகின்றது..!!

தனிமைகள்
எனக்கு கிடைப்பதில்லை
என்னைச் சூழ்ந்து
ஒரு வட்டமிட்டு நிற்கின்றது..!!

என்னிடம்
எப்பொழுதும்
பேசிக்கொண்டே இருக்கின்றது..!!

மௌனத்தை
மெளனமாக உடைக்கின்றது..
அதனுள்
ஒளிந்து கிடக்கும்
பொருட்களை எல்லாம்
தேடி எடுக்க நினைக்கின்றது..!!

சிரித்திடும் பொழுது
சிலிர்த்து விழும்
கண்ணீராகி ஒளிர்கின்றது..!!

அழுதிடும் பொழுது
உதிரம் போன்று
உருக்கம் கொண்டு வடிகின்றது..!!

விளையாடும் தருணங்களில்
ஒளிந்து நின்று பார்த்து களிக்கின்றது..!!

விடை பெரும் தருணங்களில்
கால் பிடித்து அழுது புரள்கின்றது..!!

அன்பினில்
சொட்டச் சொட்ட
நனைக்கின்றது..
கோபம்
கொள்கையில்
வெட்ட வெயிலில்
விடுக்கின்றது..!!

கொட்டக் கொட்ட
பார்த்து என்னை
இரசிக்கின்றது..
முழுதாய் என்னை
கொள்ளையடித்துச் செல்கின்றது..!!

சித்திரம் போல்
என்
சிறு நெஞ்சினில்
படிந்து கிடக்கின்றது..!!

ஓயாத
சிறு அலைகளால்
என் மனதினை
வருடி நனைக்கின்றது..!!

ஆதலால்
முப்பொழுதும்
நான்
நனைந்தபடியே கிடக்கின்றேன்..!!

இந்த காதல்
என்னை
கண்டபடி
துரத்தித் துரத்தி
காதலிக்கின்றது..!!

எழுதியவர் : வெ கண்ணன் (26-Apr-14, 5:38 pm)
பார்வை : 97

மேலே