மரணம்

நிரந்தரமாய் நிம்மதியை தேடி!
நிரந்தரமாய் கண்ணுறங்கும் வேலை!
நிரந்தரமாய் மண் திங்கும் உடலை!....
மனம் மங்கும்
விழிகள் மாசடையும்
தேகத்தை கீரியும்
குருதி சிந்தாத நிலை!...

புயலின் சீற்றம்
புல்லின் கொடுமை
உயிரின் இழப்பு
எல்லோர்க்கும் கொடுமை!..

பாதி ஆசைகள்
சொற்பனத்தில் நழுவ
மீதி வாழ்க்கையை
நோய் கொண்டு போகும் நேரம்!....

விழியில் கிழிசலாகி
விடியலில் நினைவு மட்டும்!...
உறவுகள் வடிக்கும் கண்ணீரில்
உலை கொதிக்கும் பிரிந்த நெஞ்சில்!...

வறண்ட நாவுக்கு கவலைதான் தண்ணீர்
மாண்ட மனிதற்கு பிணம் என்றப் புனைபெயர்!...

உடலில் ஊடுருவும் சுவாசக் காற்றை
விட்டுப் பிடிக்கும் வினாடி விளையாட்டில்
பிரிந்து போகும் காற்றுதான் மரணம்!....

உதிரமின்றி முடங்கும் வேலை
படுக்கைதான் ஓய்வு நாற்காலி
விதி முடிந்த நாழிகைதான் மரணம்!.......

எழுதியவர் : சி.பொற்கொடி (26-Apr-14, 5:51 pm)
சேர்த்தது : porkodi
Tanglish : maranam
பார்வை : 99

மேலே