தனியே தன்னந்தனியே
நீ
பயணிக்க
இழுத்து கட்டியிருக்கும்
மூட்டை முடிச்சுகளில்
சப்தமே இல்லாமல்
சங்கடபடுவது
என் இதயம் தான்...
கால தாமதமாகிறது
என் காலை விடியல்
நீ இல்லாமல்!
துயில் எழாத
தூங்குமூஞ்சி மரம் போல்
உலுக்கி குலுக்க
உன் பெருவிரல் இல்லாமல்!
கோடையிலும்
உறைந்து இருக்கிறது
என் கடிகாரம்
ஒரு நொடி கூட நகராமல்
நீ இல்லாமல்...
தேடவைக்கிறது
உன்னை
அந்த
மெல்லிய வெப்ப
தேனீர் திரவம்...
தேவதை
நீ
திரும்புவதற்கான
பயண சீட்டை
திரும்ப திரும்ப
பார்க்கிறேன்
திங்களே
விரைவில் திரும்புவாய்...