முதல் படி - ப்ரியன்

அழகாயிருக்கு கையெழுத்து
என்று
என்னை ஆர்வலராய்,

அற்புதமாய் வரைகிறாய்
என்று
என்னை ஓவியனாய்,

உன்னைத்தான் பார்க்கிறாள்
என்று
என்னை - அவள்
காதலனாய்,
கவிஞனா(ய்?) க்கிய,

எனது நண்பர்கள்
க,கு,ச,செ,பா,பெ,,,,,,,,,,,,,,,,
எல்லோர்க்கும்
என் முதல் நன்றி.

எழுதியவர் : ப்ரியன் (27-Apr-14, 10:42 pm)
Tanglish : muthalla padinga
பார்வை : 123

மேலே