மயங்குகிறாள் ஒரு மாது

மாலையில் மலர்ந்திடும் மலர் கொடி;
என் கூந்தலில் படர்ந்திட!

நீரில் மிதந்திடும் நிலவொளி;
என் நினைவில் கலந்திட!

இலையில் தவழ்ந்திடும் பனித்துளி;
என் உடலில் புகுந்திட!

கூறாமல் கூறி நாணுதே என் கண்கள்!
உனை தேடாமல் தேடித் தவிக்குதே என் இதழ்கள்!

வழிமேல் விழி பூட்டி புலம்பும் தனிமையிலே;
பசலை பாய்ந்து ஏங்கிடுதே மௌன மொழியினிலே!

என் உதிரம் வாடி உதிர்ந்தோடும் முன்னே;
வாகை வெல்ல வாராயோ என்னுயிர் கண்ணே!

எழுதியவர் : கார்த்திக்... (28-Apr-14, 4:16 am)
பார்வை : 138

மேலே