சொல் கேளா மனமே கெட்டிடும் தினமே
காதலெனும் போதையிலே
மலராய் விழும் பேதைகளே!
மதுவெனும் தேன்பருகி
மகரந்த துகள் உதிர்த்து
வண்டெனப் பறந்திடும் பாரீர் !!
பாரெனும் நீரில் நீந்திடும்
பாலுறு மீன்கள் நீங்கள்
தூண்டில் புழுக்கண்டு
துள்ளியோடி வாழ்வினை
பாழாக்கி பின் தரையினில்
துள்ளித் துடித்து துவழ்வதேனோ!!
வேம்பெனும் மருந்தினை
விரும்பிடா மனமும்
பாம்பென அறிந்தும் பிணைந்திடத் துடிக்கும்
இனிப்பென வாழ்வை எளிதாய் எண்ணி
பொருப்பென்பதில்லா வெறுப்பென விலகும்
காஞ்சக் காளை கம்மங் கொல்லை
பாஞ்சு பாஞ்சு மேஞ்சு
தொரப்படைத்து ஓயும் வேலை
நீரின் நினைப்படைக்கும் முன்னே !
க(வி)க்கவும் முடியா விழுங்கவும் முடியா
கதறும் வேலை கண்விழிப் பிதுங்கி
கண்கெட்டப்பின் சூரியோதயம்
கண்டென் பயன் காமத் தீயும் அது போலே !

