கண்ணாடி நம் முன்னாடி

பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி
பிழைகளை எதிரொலிக்கும் முன்னாடி !
அழகினை காட்டுவதும் கண்ணாடி
அழகை கூட்டிட உதவிடும் முன்னாடி !
அகத்தின் அழகிற்கு இதயமே கண்ணாடி
அழுக்காறை வெளிப்படுத்தும் முன்னாடி !
புறத் தோற்றத்தின் நிழலாய் கண்ணாடி
புறத்தை மாற்றிட உதவிடும் முன்னாடி !
உள்ளதை உள்ளபடி உரைக்கும் கண்ணாடி
உண்மையை மறைக்க உதவும் முன்னாடி !
மனதிற்கு மனசாட்சி காட்சிக்கு கண்ணாடி
மன்னனே ஆனாலும் நிற்பான் முன்னாடி !
கற்பனையை காட்டாது என்றும் கண்ணாடி
கடமையை செய்திடும் என்றும் முன்னாடி !
காலம் மாறினாலும் மாறாதது கண்ணாடி
காலம் முடியும்வரை நிற்போம் முன்னாடி !
பழனி குமார்