சாமானியனின் சட்டைப்பை

மக்களாட்சியின்
நிலப் பிரபுக்கள்
மக்கள் பிரதிநிதிகள்

மக்களாட்சியின்
மன்னர்கள்
மா முதலாளிகள்

மன்னருக்குள்
நிலப் பிரபுக்களும்
நிலப் பிரபுக்களுக்குள்
மன்னர்களும்

கலைந்து குழப்புவதும்
குழப்பிக் கலைவதுமே
மக்களாட்சி
மக்களே!

ஆனால் ஒன்று!

மன்னனும் சரி!
நிலப் பிரபுவும் சரி!

இரத்தமின்றி
யுத்தமின்றி

வட்டியும் முதலுமாய்
கடைசியும் கடைசிவரையுமாய்

அத்தனைக்கும் இன்று

மாறி மாறி
எடுப்பதற்கும்
வாரி வாரி
இறைப்பதற்கும்

சத்தமின்றி
நுழைகிறார்கள்
சகஜமாக
நுழைகிறார்கள்

சாமானியனின்
சட்டைப்பைக்குள்!

எழுதியவர் : சர்நா (28-Apr-14, 9:57 am)
பார்வை : 113

மேலே