உயிரைக் கேட்கும் அவள் மனம்

கவலைகளுக்கும்
கண்ணீருக்கும்
துனைநின்றால்தான்,
வாழ்க்கை வசந்தமுறும்
என்பது எனக்குத் தெரியும் .
இருந்தும்
ஏனோ அவள் நினைவுகள்
கவலையையும் கண்ணீரையும்
ஒன்றாக எனக்களித்தது மட்டுமின்றி,
என்னை துன்பத்திலும் ஆழ்த்தியது
எப்படி தாங்கும் என் இதயம்?
கல் இதயமா அவளுக்கு?
கருணை இன்றி தண்டிக்கிறாளே!
நான் தடுக்கி விழுந்தது,
அவள் காதலிலும் காலடியிலும்தான்
இருந்தும்
என்னை தூக்கி நிறுத்தாமல்
தூக்கி எறிந்துப் போறாளே!
பொன்னகை அலங்காரத்துடன்
புன்னகை புரிந்தபடி...!
போடி போ .................

எழுதியவர் : Antonysam (28-Apr-14, 3:44 pm)
சேர்த்தது : அந்தோனி sam
பார்வை : 111

மேலே