விதவை

"திருமதி "
விதியால்
"திருவை "
இழந்ததால்
மதி கெட்ட
சமுதாயத்தால்
"விதவை" என
மறைவில்
மறைக்கப்பட்டாலும்
மங்கையாய்
மன வலிமையையும்
மன உறுதியையும்
இழக்கமால்
குடும்ப சுமைகளை ஏற்று
குலம் காத்து
விதியை
மதியால் வென்று
சவால்களை
சமாளித்து
சாதனைகள் புரியும்
விதவைகளின்
விதிகளை மாற்ற
சமுதயாம் முன் வரும்
நாள் எப்போது ????