எழுத்து தளத்தின் தலைவன் -பிறந்த தினம்
அமுதும் தமிழும் ஒன்று
==அமிர்த கணேசன் கன்று !
அமுதருந்திய இளங்கன்று
== ஐம்பத்தொன்பது இன்று !
எழுத்து தளத்தின் தலைவன்
== ஏந்திய தமிழின் கவிஞன் !
பழுத்த பழத்தின் சுவை
==பாரினில் இல்லை இணை !
இலக்கிய கடலில் இன்பகலம்
==இணைபவர் வளர அறிவுக்கலம் !
துலக்கிய மொழியின் தூரிகை
==துணைக்கு நல்ல காரிகை !
அகன் அவர்தான் அபயபதி
==அரும்பணிக்கு உமாபதி !
ஏகன் எழுத்தில் இமயபதி
==வாழிய வாழிய வாழியவே !