இருட்டுப் படுக்கையறை

குருதி சிதறிய
வாசல்
கைகள் பதிந்த
கதவு
லேசாக பிரட்டும்
உயிர் வாசம்
மெல்ல ஆடும்
கதவு வழியில்
இருட்டுப்
படுக்கையறை

இருட்டு
வெள்ளத்தில்
கதவுக்குப்பின்
தாழ்பாள் உயர
உருவம்
தலையில்லை
தெரியவில்லை

உருவத்தில்
நகர்வுடன்
லேசான
ஒளிர்வு
காட்டும்
இரு குட்டி
நிலவுகளாய்
அதன் விழிகள்
இமை துடித்து
உருட்டியே
வெறிக்கிறது

சிகை கலைந்து
சீலை இடுப்பில்
சொருகி நிற்கும்
வேலைக்காரி
நேர்கொண்டு
வெறிக்கிறாள்
அந்த விழிகளை
பித்தமேறி
பார்வை
பிறழாமல்

"என்ன சரோஜா
போகட்டும் விடு
இனி இரத்தப்
பொரியல்
முடியாது
சீக்கிரம்
தொடச்சுட்டு போய்
அடுப்பப் பாரு"
என்றவளிடன்

குட்டிம்மா
தள்ளிவிட்டு
விளையாடுதும்மா
என்றாள்
சலித்துக்கொண்டே

கதவிலிருந்து
மெல்ல நகர்ந்து
அம்மாவிடம்
ஒட்டி சிரித்தாள்
குட்டிம்மா
சுட்டி சுகன்யா.

வெளிச்சம்
தொலைத்த
வீடுகள்

எழுதியவர் : சர்நா (29-Apr-14, 8:41 am)
பார்வை : 516

மேலே