நாளை மண்ணில் புதைக்கிறேன் என்னை 555

உயிரே...
உடலோடு இருக்கும் உயிரை
விட்டுவிட முடியவில்லை...
உடலாக நானும் என் உயிராக
நீயும் இருந்துகொண்டு...
விட்டுவிடு என்கிறாயடி
என் காதலை...
விட்டுவிட முடியவில்லை
உன்னையும்...
என் மனம் மறக்க விரும்பும்
உன் நினைவுகளையும்...
சிறுவயதிலிருந்து நான்
ஓடி ஆடிய வீடுதான்...
சிலநேரங்களில் கால் தவறி
தலை தட்டி விழுகிறேன்...
உன்னோடு ஓடி ஆடிய நானும்
விழுகிறேன் உன் ஆசைப்படி...
உன்னையும்
உன் நினைவுகளையும்...
என்னில்
புதைத்து கொண்டு...
நாளை நான் மண்ணில்
புதைக்கிறேன் என்னை...
நீ வருவாயா கண்ணீர்
வடிக்க அல்ல...
உன் கடை கண்ணால்
என்னை பார்க்க.....