காதலின் அடையாளம்

இதுவரை பிறந்த
காதல் கவிதைகள்
உலகத்தில் ஏராளம்

அனைத்தையும் தொகுத்து
அமைத்தேன் உனக்கு
வரவில்லை முதல்தாளம்

உன்னை தவிர்த்து
நானும் வாழ்ந்தால்
கொடுமைதான் பூகோலம்

எப்பொழுதும் வியந்து
உன்னிடம் காண்கிறேன்
அன்பின் தாராளம்

நம்மைப் பிரிக்க
வந்தாலும் முடியாது
துருப்புப் பட்டாளம்

நீயும்
நானும் மட்டுமே தான்
காதலுக்கு அடையாளம்

எழுதியவர் : பெருமாள் (29-Apr-14, 7:00 pm)
Tanglish : kathalin adaiyaalam
பார்வை : 110

மேலே