என்ன ஜாதி

அது ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்பு,
அலுவலாய் நின்றிருந்தேன்.
என்னை அண்டி அவன் வந்துநின்றான்.
கேட்க ஏதோ எத்தனித்து,
தயங்கியபடி தத்தளித்தான்.
விழிகளால் வினவினேன்..
பேச்சை,
என்ன ஜாதி...???? என்றிழுத்தான்..
மறுநொடி நான்,
மனிதஜாதி என்றுரைக்க..
முகம் வாடிச் சென்றுவிட்டான்.
பாவம்...அவன் வேறு ஜாதிபோல......