காதல்
என்னவளே ,
உன்னை நினைத்து தனிமையில் நின்றிருந்தேன்
என்னே மாயம்! எதர்ச்சியாக திரும்பினேன்
உந்தன் புன்னகை முகத்தை கண்டேன்
எனக்குள் பேசினேன் இது பிரம்மைஎன்றேன்
உன் இதழோர சிரிப்பில் உணர்ந்தேன்
எந்தன் கண்முன் நடப்பது நிஜமேன்றேன்
உன் கைவிரல் தொட ஆசைப்பட்டேன்
எனக்குள் ஆசை இருந்தும் தயங்கினேன்
உன்மேல் கொண்ட காதலால் பெண்ணே
எந்தன் கால்கள் தள்ளி இன்றதடி....