அம்மாவை பற்றிய என் சுகமான சுமைகள்

முன்னிரண்டு மாதங்கள் என்னை அறியாமல்
குழம்பி தவித்தாய்!
மூன்றாம் மாதம் உன் வயிறு என்ற சிப்பிக்குள்
முத்தாய் நானிருப்பதை அறிந்தாய்!
நன்காம் மாதத்தில் மசக்கை அனுபவித்தாய்!
ஐந்தாம் மாதத்தில் அறுசுவை உணவு உண்டு
என்னை மகிழ செய்தாய்!
ஆறாம் மாதம் பால் சுரக்க உள்ளத்தில்
இன்பமுட்றாய்!
ஏழாம் மாதம் என் அசைவுகளை உணர்த்தாய்!
எட்டாம் மாதம் நான் உதைப்பதை அழகாய்
ரசித்தாய்!
ஒன்பதாம் மாதம் நான் அஞ்சி விட கூடாது என
பலவித வளையல்களை அணிந்தாய்!
பத்தாம் மாதம் ஒரு முறை நான் அம்மா என
அழைப்பதற்காக பல முறை அம்மா,அம்மா
என பிரசவத்தில் அலறினாய்!
என் பசி போக உன் இரத்ததை பாலாக்கினாய்!
நான் பிறந்த பின் என்னை இவ்வுலகத்திற்கு
அறிமுகப்படுத்தினாய்!
நான் வளர்ந்த பின் எனக்கு இவ்வுலகத்தை
அறிமுகப்படுத்தினாய்!
இவ்வளவு செய்த உனக்கு நான் என்ன செய்வது
அடுத்த ஜென்மத்தில் கடவுள்கிட்ட கருவறை
கேட்டு உன்னை மகளாய் சுமக்கிறேன்!
அன்பு அன்னையே!...................

எழுதியவர் : கௌசல்யா (30-Apr-14, 2:41 pm)
பார்வை : 572

மேலே