அம்மா கவிதை

கொஞ்சு மொழி பிஞ்சினிலெ அன்பு
மிஞ்சுகின்ற செவ்விதழின் சிரிப்பு
பஞ்சல்ல பட்டு உடலின் மென்மை
கெஞ்சுதம்மா கொஞ்சுதற்கு உறவு.,

மெத்தென்ற மலர் தானோ பாதம்
முத்து மணி ரத்தினமோ கண்கள்
சத்தமின்றி ஓசை இடும் இதழ்கள்
இத்தனையும் முத்தமிடத் தந்தனவோ

ஆராரோ பாடி உன்னை
ஆடிவரும் தொட்டிலிலே
சீராட்டி தாலாட்டி
சீக்கிரமாய் தூங்கிடவே
அன்னை தந்த முத்தங்கள்
அத்தனையும் அர்த்தங்கள்
ஆளாக்கி பெயராக்கி
ஆளவைக்கும் அணிகலன்கள்.

எழுதியவர் : பாத்திமா MALAR (1-May-14, 11:56 pm)
Tanglish : amma kavithai
பார்வை : 486

மேலே