puyalukkup pinne

புயலுக்குப் பின்னே ...

நடுஜா மத்தில் கொடுங்காற்று வீச
நடுங்கிய மரங்கள் நெடுஞ்சாலை எங்கும்
கிடுகிடு வென்று சரிந்தன மண்ணில்

மேகம் சூழ்ந்த வானில் எங்கும்
கார்முகில் கூட்டம் கீர்த்தனம் பாட
வீடுகள் அனைத்தும் மூழ்கின இருளில்

விழுந்து கிடந்த வேருடன் மரத்தில்
பழுத்திரு இலைகள் பச்சைத் தளிர்கள்
வீழ்ந்து கிடந்தன வழிகள் எங்கும்

எழுதியவர் : (30-Apr-14, 4:09 pm)
பார்வை : 54

மேலே