எழுத எழுத கவிதை அழிந்து போகும் நேரம்

பறக்க ஆசை கொண்டு
பறவை ஒன்று காதல்
சிறகடித்து வானில்
பறக்கு மந்த நேரம்
எழுத நினைத்த கவிதை
எழுதத் தொடங்கும் போது
சுரந்த கண்ணீர்த் துளியில்
கரைந்து விட்டதாலே
அழுது முடித்த பின்னே
எழுத நினைத்த கவிதை
எழுதிப் முடிக்கும் முன்னே
பொழுதும் விடிந்து போச்சு
ஏக்கம் என்றும் மனதில்
தாக்கத் தானோ செய்யும்
எழுத எழுத கவிதை
அழிந்து போகும் நேரம்