காலம் கனிந்தது

அன்னைக்கு அடுத்தவளாய்
எங்களை அரவணைத்து நின்றவளே..
அன்னை போல் அன்பு காட்டினாய்
தந்தைபோல் அறிவு புகட்டினாய்
இன்றோ...
அன்பன் அவன் கைக்கோர்த்து
அவர் வாழ்வின் அர்த்தமாகிறாய்
பிறப்பிடம் என்ற கதவு தாழிடவே
இருப்பிடம் என்ற கதவு திறக்கிறது
உனக்காய்...
கண்கள் நீரை உமிழ்கின்றன
இருந்த போதும்,
களிப்பினில் உள்ளம் நிறைகின்றது
மணக்கோலம் பூண்டு நீ நிற்க
மகிழ்ச்சியில் திளைகின்றன,,,,,
உன்னை சுமந்த கருவறையும்
உன்னை தங்கிய தோள்களும்...
போய்வா கண்மணியே!!!!...
புகுந்த வீட்டின் வசந்தம் காண
பிறந்த வீட்டின் பெருமை காக்க...
இறுதியில் இங்கே வைக்கின்றேன்
என் வேண்டுகோள் ஒன்றை....
இறைவனால் உன்னோடு பிணையப்பட்ட
இந்த அன்பு உயிர்களை
என்றும் மறவாமை வேண்டும்..
மறந்தும் இறவாமை வேண்டும்..
குறித்து கொள்வாயா இந்த இறந்த காலத்தை
உன் எதிர்காலத்தில்?