ஆசை.......!!

எனக்கும்
ஒரு ஆசை -மறு
ஜென்மமிருந்தால் -நானும்
பெண்னாய் பிறக்க ........

அதில் நீ
ஆண்னாய் பிறக்க-கடவுள்
சித்தமழித்தால்-உனக்கு
காதல் வலி புரியவைப்பேன்........

நீ
இப்போதுகாட்டும் மெளனம்
நான் உனக்கு காட்டுவேன்
உனக்கும் காதல் வலி தெரியவரும்...........

அப்போது -நீ
தூக்கம் தொலைத்து -முகத்தில்
தாடிமுள் வளரவிட்டு-நீ
அழும்போது -நான்
ரசிப்பேன் உன் வலிகளை .........

எனக்கு வலிக்கவேண்டுமென்று-நீ
மற்றவனோடு -பேசி
சிரிப்பதைப்போல்-நான்
உனக்காய் செய்வேன்.........

அப்போது -நீ
கண்ணீர்விட்டு கதறி அழுவாய்
நான் -உன் கண்ணீரில்
உப்பு சத்திருக்க என்று ஆராச்சி
செய்து மகிழ்ந்திடுவேன்.................!

என்னக்கும் ஒரு -ஆசை
அது மறுஜென்மத்தில் -நீ
ஆணாய்ப்பிறக்க -உனக்கு
பிடித்த பெண்னாய் நான்
ஜனிக்க.....................!!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:28 pm)
பார்வை : 1143

மேலே