தோழர்களே

தோழர்களே..
வானம் உனக்கு தூரமில்லை..
அதை நீ தீண்ட துணியும்போது..!
துன்பம் உன்னை வதைக்காது..
அதை நீ தாங்கும்போது..!
தோல்வி உன்னை சிதைக்காது..
அதை நீ எதிர்கொள்ளும்போது..!
துரோகம் உனக்கு நேராது..
அனைவரையும் உன் அன்பு.. அரவனைக்கும்போது..!
முதுமை உன் உறுப்புகளுக்குதான்..
மனதிற்கு அல்ல..
மரணம் உன் உடலிற்குதான்..
ஆன்மாவுக்கு அல்ல..!
இவையாவும் நான் அறிந்தது அல்ல..
உணரதொடங்கியது..!
அறிவுரை என்பது..
அனுபவத்தின் முடிவாய் இருக்க தேவையில்லை..!
நாம் அறிந்ததில் தொடக்கமாய் இருக்கட்டும்..!
தோழர்களே..
அறிந்து கொள்ளுங்கள்..
நடக்க தெரிந்தவனுக்கும் நீதான் ஊன்றுகோல்..
பிறகு...
உனக்கு பறக்க சொல்லிதர அவசியமில்லை..!