தினமொரு பொழுதுகள் நமக்காய் விடிகிறது

உழைக்கும் நிமிடம் கையிலிருக்க
நம்மை சோம்பலால் ஆட்கொள்ளும்
அலட்சியத்தை விரட்டிடுவோம்..!
வாழ்வு இழக்கும் தாய்நாட்டை
நம் உயிரென்று உணர்ந்து தினம்
காத்திடுவோம்..!
நம் நாடுசெழிக்க பாடுபட்டு
ஒற்றுமையால் நல்வாழ்க்கை
நாமும் வாழ்ந்திடுவோம்..!
வெறுமை உணரும் உறக்கம்வெறுத்து
உடலின் சோர்வு நீங்க சிறுநேர
ஓய்வெடுத்திடுவோம்..!
பிறர்நலன் கருதிதினம் பகைவிரட்டும்
அன்பு பகிர்ந்து நன்மை செய்தே உலகில்
நிலைத்து நிற்கும் புகழ்தேடிடுவோம்..!
உலகம் உண்ண உணவளிக்கும் உழவர்கள்
நம்மை வாழ வைக்கும் உயர்ந்த வள்ளல்
என்று போற்றிடுவோம்..!
உழைக்கும் நானே நல்ல தமிழன் என்று
உள்உணர்வால் உரைக்கசொல்லி
உறங்கும் மனதை தட்டி எழுப்பிடுவோம்..!
....கவிபாரதி....