காலத்தின் கோலத்தில் காணமல் போனவன்

தொலைந்து போன என்
நினைவுகளை தேடி பார்க்கிறேன்....

காலத்தின் கோலத்தில்
காணாமல் போன !

மீண்டும் சந்திப்போம் என்று சொன்ன
நீயும் உன் வார்த்தைகளும்...

நம்மைப்போல் யாரும் இல்லை என்று சொன்ன
நீயும் உன் உறவும்...

இறந்தாலும் உன்னை மறவேன் என்று சொன்ன
நீயும் உன் நம்பிக்கையும்....

இன்று நியாபகம் வருகிறது...

நீயும் நம் நட்பும்...

செய்திதாளில் "காலமானார்" என்று...

உன் புகைப்படத்தை பார்த்தவுடன்....

கடவுளை வேண்டிகொள்கிறேன்...
நீயும் எனைபோலவே !
இருந்திருக்க வேண்டுமென்று...

இப்படிக்கு...
காலத்தின் கோலத்தில் காணமல் போனவன்



எழுதியவர் : சரவணன் (2-Mar-11, 3:13 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 648

மேலே