மனிதப்பிறவியா நீங்கள்

துரோகிகளே -
அன்பைக்கூட உணமையாக வைக்கவில்லை
வாய்வார்த்தை மட்டும்
வசைபாடிக்கொண்டிருக்கிறது .......

இடத்திற்கு ஏற்ப மாறும்
பச்சோந்திகூட
உங்களிடம் தோற்றுவிட்டது -
முதலிடம் உங்களுக்குத்தான் .......

காரியம் ஆனவுடன்
கழட்டிவிடும் காலனிபோல்
வாசலோடு காத்திருந்து
தெருக்கொளோடு உறவாடுகிறேன் ......

துரோகத்தையே தேகமாய்
ஆணவ மூச்சிலே
அகங்காரத்தின் துணையில்
உங்களின் அநீதி வாழ்க்கை ......

உறவுகள் என்ன உடையா
நினைத்த மாத்திரத்தில்
நினைவில் மாற்றிக்கொள்ள ........

ஆணிவேர்போல் ஆழபதிந்த
உறவுகளை அவசர கோலத்தில்
மறுக்க முடியுமா
இல்லை மறக்கத்தான் முடியுமா .......

கல்லெறிந்த பின்பும்கூட
வாலாட்ட மறந்ததில்லை
பாசத்தோடு வளர்த்த நாய் -
இருந்தும் நீங்கள் ?

எழுதியவர் : வினாயகமுருகன் (2-May-14, 12:38 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 87

மேலே