தடைகளைத் தாண்டி
சிறு சிறு தவறுகளில் நம்மை
நாம் கண்டுகொண்டால் மட்டுமே
வெற்றிக்கான பாதையை சென்றடையலாம்...!
மற்றவர்களின் உதவியை நீ
நாடுவாயெனில் உன்னால் நீ
உன்னை உணரமுடியவில்லை
என்று அர்த்தம்...!
பல நூறு தடைகளைத் தாண்டும் போது
மட்டுமே வெற்றி எனும் அறிய பொக்கிஷம் நமக்கு கிட்டும்...!
தவறுகளை திருத்திக்கொண்டு தடைகளை தாண்டி வா நண்பா...!
உன் ஒவ்வொரு தவறுகளும்
உனக்கு தடயமாய் மாறும்...!
எழுந்து வா தோழா
வெல்வோம் ஜெகத்தினை...!

